| நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இடம்பெற்ற காணொளி உண்மை என்றும் அதில் மார்பிங் ஏதுவும் செய்யப்படவில்லை எனவும் பெங்களூரில் உள்ள தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். |
| சுவாமி நித்யானந்தா, சென்னையில் கடந்த 13ம் திகதி தனது சீடர்கள் மற்றும் நடிகை ரஞ்சிதாவுடன் வந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, ரஞ்சிதாவும் நானும் சேர்ந்து இருக்கும் காணொளி உண்மை இல்லை. மார்பிங் மூலம் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க நிபுணர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த காணொளி குறித்து பெங்களூரில் உள்ள தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 2010ல் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டனர். நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் உள்ள காணொளி உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என்று கேட்டனர். நான் அந்த காணொளியை ஆய்வு செய்த பின்னர், உண்மையானது என்றும் இதில் ஆள்மாறாட்டம் ஏதும் இல்லை எனவும் அறிக்கை கொடுத்தேன் என்றார். |





0 comments: on "நித்யானந்தா ஆபாச காணொளி உண்மை தான்: பெங்களூர் தடயவியல் நிபுணர்"
Post a Comment