சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இதுவரை 8,500 பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஜனாதிபதி அசாத் பதவி விலக மறுத்து வருகிறார்.
சிரியாவின் இந்த போக்கை கண்டித்து அரபு கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சவுதி அரேபியா, பக்ரைன், ஓமன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 6 நாடுகள் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தூதரகங்களை மூடி விட தீர்மானம் செய்துள்ளன.
ஏற்கனவே இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் இருந்த சிரியா நாட்டு தூதர்களை வெளியேற்றி விட்டன. தற்போது சிரியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த இந்த புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இதற்கிடையில் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் பிராந்தியத்தில் இராணுவத்தினர் இறக்கமின்றி அப்பாவி பொதுமக்கள் உட்பட 45 பேரை கொன்று குவித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 23 பேரின் கைகளை பின்புறமாக கட்டிவைத்து மிக கொடூரமான கொன்று இருக்கிறார்கள் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரின் இந்த அத்துமீறல்களால் அச்சம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி துருக்கி நாட்டிற்குள் செல்கிறார்கள்.





0 comments: on "சிரியாவில் உள்ள தூதரகங்களை மூடி விட அரபு நாடுகள் முடிவு: மக்கள் அகதிகளாக வெளியேறும் அவலம்"
Post a Comment