தலைப்புச் செய்தி

Saturday, March 17, 2012

ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள்: அமெரிக்கா எச்சரிக்கை


ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக கடந்தாண்டு ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ஈரானை கைவிடுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும் நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இத்தகைய எச்சரிக்கைகளுக்குப் பின்னணியில் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு குழுவினரே காரணம் என்று அமெரிக்காவுக்காக இந்திய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள்: அமெரிக்கா எச்சரிக்கை"

Post a Comment