இந்த வீடுகளுக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் வழங்கி அவற்றுக்கான கட்டணங்களையும் வசூலித்து வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தாததால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் பெயரில் ரூ.6 கோடி கட்டண பாக்கி நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டண பாக்கி குறித்து டெல்லி மாநகராட்சியிடம் விவரம் கேட்டிருந்தார்.
அதற்கு அளித்த பதிலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், குடிநீர் கட்டண பாக்கி தொடர்பாக 3,335 தொகை சீட்டுகள் நிலுவையில் உள்ளது.
இதற்கான தொகை ரூ.6.27 கோடி என்று தெரிவித்துள்ளது.
இதில் அதிக பட்சமாக முன்னாள் மத்திய அமைச்சர் கனிகான் சவுத்ரி ரூ.42 லட்சம் பாக்கி வைத்துள்ளார். ஆனால் இவர் இறந்துவிட்டார். இவருக்கான கட்டண பாக்கியை யாரும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜேஷ் பைலட், சுனில் தத், ஜானேஷ்வர் மிஸ்ரா, ஆகியோர் பெயரிலும் கட்டண பாக்கிகள் உள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சவுத்திரி ரூ.34 லட்சம் டெலிபோன் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோரும் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கட்டண பாக்கியை வசூலிக்க டெல்லி மாநகராட்சி உயர் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தது.
அதில் கடந்த 2008ம் ஆண்டு கட்டண பாக்கியை சம்பந்தப்பட்டவர்களின் சம்பளம், பென்சன் ஆகியவற்றில் இருந்து பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு வழங்குமாறு நாடாளுமன்ற செயலகத்துக்கு உத்தரவிட்டது.
இருப்பினும் கோடிக்கணக்கில் பாக்கி இருப்பதால் நிலுவை தொகை சிறிதளவுதான் குறைந்து வருகிறது. |
0 comments: on "பாசிச பிச்சக்காரன் எல்.கே.அத்வானி மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த வில்லை: டெல்லி மாநகராட்சி புகார்"
Post a Comment