மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது பகவத் கீதை. வாழ்க்கை நெறிகளை பற்றி கூறும் இந்நூல், இந்துக்களின் புனித நூலாக கருதப்படுகிறது.
கிருஷ்ணரின் புகழ் பரப்பும் பன்னாட்டு அமைப்பான ‘இஸ்கான்’ அமைப்பின் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, பகவத் கீதையை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து ‘பகவத் கீதா அஸ் இட் வாஸ்‘ என்ற பெயரில் வெளியிட்டார்.
இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரி ரஷ்யாவின் சைபீரிய டாம்ஸ்க் நகர நீதிமன்றத்தில் கடந்த சூனில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்பின்பு, கடந்த டிசம்பர் 28ம் திகதி அந்த வழக்கு தள்ளுபடியானது.
அந்த தீர்ப்பை எதிர்த்து டாம்ஸ்க் மாவட்ட நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. பகவத் கீதை, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை அவமதிப்பதாகவும், பிரிவினையை தூண்டுவதாகவும் உள்ளது என்று அப்பீல் மனுவில் கூறப்பட்டது.
இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ‘கீழ் நீதிமன்றம் எடுத்த முடிவு சரியானதுதான்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை இஸ்கான் அமைப்பும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அஜய் மல்கோத்ராவும், வரவேற்றுள்ளனர். |
0 comments: on "பகவத் கீதை விவகாரம்: வழக்கை தள்ளுபடி செய்தது ரஷ்ய நீதிமன்றம்"
Post a Comment