அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், 11 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வாக்காளர் தகுதியை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து, அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களின் தொகை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 2000ல், அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஐந்து லட்சத்து 76 ஆயிரம் பேர் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக அடையாளம் கண்டறியப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, இரு மடங்காகியிருக்கிறது. 2010ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அமெரிக்கர்களில், 11 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிபர் தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர் தகுதியைப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய நாடுகளின் மக்களில், இந்தியர்கள் 80 சதவீதம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பாகிஸ்தானி அமெரிக்கர்களின் வாக்காளர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்சத்து 61 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இத்த தகவலை, அமெரிக்காவின் இரு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.




0 comments: on "அமெரிக்காவில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு"
Post a Comment