தலைப்புச் செய்தி

Wednesday, March 14, 2012

வெளிமாநில மாணவர்களின் உரிமைகளை பறிக்ககூடாது! கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை

சென்னை வேளச்சேரியின் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த‌ ஐந்து இளைஞர்கள் காவல்துறையினரால சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படித்து வரும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விபரங்களை மாநகர காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். 


இத்தகைய செயல்பாடு வெளிமாநில மாணவர்களின் உள்ளத்தில் ஒரு வித குற்ற உணர்வை எற்படுத்துவதோடு பிற மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படவும் காரணமாக அமையும். மேலும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், தனிமனித மாண்பிற்கு எதிரானது. இதுமட்டுமின்றி காவல்துறையினர் தனி நபர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் விதமாக உளவு பார்ப்பது, தொடர்ந்து கண்காணிப்பது, அவர்களை பற்றிய விபரங்களை சேகரிப்பது போன்ற செயல்பாடுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் கண்டித்துள்ளதோடு, தடையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவ சமூகத்திற்கு எதிரான அநீதிகளை எதிர்த்து தொடந்து போராடி வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்தகைய செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விபரங்களை காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக சேகரிப்பதை தடை செய்யக்கோரியும், மேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க‌ கோரியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் முஹம்மது தம்பி, மாநில துணைத்தலைவர் சாகுல் ஷஹீத், மற்றும் சென்னை மாவட்ட தலைவர் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் சலாஹுதீன் ஆகியோர் தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று தனிப்பிரிவு அதிகாரியிடம் மனு அளித்தனர். 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வெளிமாநில மாணவர்களின் உரிமைகளை பறிக்ககூடாது! கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை"

Post a Comment