பத்திரிக்கையாளர் காஜிமி'யை விசாரணை என்ற பெயரில், வித விதமாக போலீஸ் செய்யும் சித்திரவதைகளை விளக்கமாக பட்டியலிட்டுள்ளார், காஜிமி'யின் வக்கீல் விஜய் அகர்வால்.
நீதிபதி வினோத் யாதவிடம் அளிக்கப்பட மனுவில், வக்கீல் விஜய் அகர்வால் கூறியுள்ளதாவது:- காஜிமி' க்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படுவதில்லை, தூங்கவும் அனுமதிப்பதில்லை. மேலும், உணவில் மிக அதிகளவில் உப்பு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
அதை சாப்பிட்ட உடன் தண்ணீர் தாகம் உண்டாகி, ஒரு மிடறு தண்ணீருக்காக கெஞ்சும் நிலையை ஏற்படுத்துகின்றனர். சித்திரவதையின் உச்ச கட்டமாக அவரை தூங்கவே விடுவதில்லை. நீதிமன்றத்தின் மூலம் "கஸ்டடி"யில் எடுத்தது டெல்லி போலீசார் தான். அவர்களுக்கு தான் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளது.
ஆனால், யார் யாரோ வந்து விசாரணை என்ற பெயரால், கடும் சித்திரவதை செய்கின்றனர். அவர்களில் பலர் சாதாரண உடையிலேயே வருவதால், அவர்கள் யாரென்றே தெரிவதில்லை. இஸ்ரேலின் "மொசாத்" உட்பட பல அமைப்புகளும் வந்து, மனித தன்மைன்மைக்கு மாற்றமான பல இழி செயல்களை செய்து வருகின்றனர்.
மேலும், தாங்கள் சொல்வதை போல் எல்லா வற்றையும் ஒப்புக்கொள்ள வற்புறுத்துகின்றனர். உனது வாழ்க்கை என்பது முடிந்து போன கதை, எங்கள் சொல்படி நீ நடக்காவிட்டால், உனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உறவினர்களையும், சிக்க வைத்து விடுவோம் என்றும் மிரட்டுகின்றனர்.........
காஜிமி' பற்றிய குறிப்புகள்:- உத்தரபிரதேச மாநிலம், மீரட்டைச் சார்ந்த காஜிமி' தலைநகரில் தலைசிறந்த உர்து பத்திரிகையாளர் ஆவார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்காக பணியாற்றியவர் காஜிமி.. தூர்தர்சனுக்காக, ஈராக் போரைக் குறித்து நேரடியாக துணிச்சலுடன் சென்று செய்திகளை சேகரித்தார்.
குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருடன் பல வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பங்கேற்றுள்ளார். ஃப்ரஸ் இன்ஃபர்மேசன் பீரோவின் அக்கிரெடிட்டேசன் பெற்றுள்ள காஜிமி' டெஹ்ரான் ரேடியோ, ஈரான் நியூஸ் ஏஜன்சி ஆகியவற்றிலும் ரிப்போர்ட்டராக பணியாற்றி வருகிறார். மேலும், சொந்தமாக ஒரு செய்தி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்..... சக பத்திரிகையாளர்களிடம் மதிப்பை பெற்றுள்ள காஜிமி'யை, தீவிரவாத வழக்கில் கைது செய்திருப்பது தலைநகரின் பத்திரிகை உலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.





0 comments: on "போலீஸ் "கஸ்டடி"யில் காஜிமி' க்கு இழைக்கப்படும் கொடுமைகள் : நீதிமன்றத்தில் முறையீடு!"
Post a Comment