தலைப்புச் செய்தி

Sunday, March 18, 2012

உடல் பருமனாக இருந்தால் சம்பளம் கிடையாது: பிரித்தானிய அரசு அதிரடி


பிரித்தானியாவில் காவல்துறை அதிகாரிகள் உடல்நலக் குறைவுடன், மிக குண்டாக இருந்தால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகளை தெரிவு செய்யும் போது ஆரோக்கியம், கட்டுமஸ்தான உடல் போன்றவற்றை சரிபார்த்து தான் தெரிவு செய்கின்றனர்.
ஆனால் பணியில் சேர்ந்த உடன் பெரும்பாலான நபர்கள் தங்களை உடலை கவனிப்பதில்லை, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
இதனால் நாளடைவில் தொப்பை ஏற்படுகிறது. இதனால் தங்களை பணிகளை செய்வதில் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி காவல்துறை அதிகாரிகளுக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்படும்.
இதில் மூன்று சோதனைகளுக்குள் உடல் எடையை இவர்கள் குறைக்க தவறினால் அவர்களது சம்பளத்தில் 8 சதவிகிதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உடல் பருமனாக இருந்தால் சம்பளம் கிடையாது: பிரித்தானிய அரசு அதிரடி"

Post a Comment