நேட்டோ படைகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி இனிமேல் அளிக்கப்படாது என பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஜ்போன் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்துறைகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவி வேறு துறைகளுக்கு அளிக்கப்படும் என்றும், இதற்கு காரணம் 2014ம் ஆண்டிலேயே பிரிட்டன் படைகள் நாடு திரும்புவது தான் என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஜ்போன் கூறுகையில், ஆப்கானிஸ்தான் பிரச்னைக்கு 2.4 பில்லியன் பவுண்டு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்தத் தொகை பிரிட்டனின் பொருளாதார நிலையை சரிக்கட்ட பயன்படும் என்று நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 2014ம் ஆண்டில் 9500 வீரர்கள் நாடு திரும்புவர், இந்த ஆண்டு 500 பேர் திரும்புவர். நிதி ஒதுக்கீடு குறைவதால் எதிர்வரும் 2013ம் ஆண்டில் படைகள் அனைத்தும் திரும்பி விடலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
வழக்கமான இராணுவச் செலவுகள் தவிர புதிதாக 2001ம் ஆண்டு முதல் 13.3 பில்லியன் பவுண்டு கூடுதலாக இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் ஆறு பேர் ஆப்கானிஸ்தானில் இறந்ததால், அனைத்து இராணுவ வீரர்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற குரல் பிரிட்டனில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பேசியதில் அடுத்த ஆண்டிலேயே அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறும் வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த இராணுவத்தின் பணிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கேமரூன் ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: on "நேட்டோ படைகளுக்கு நிதி அளிக்கப்பட மாட்டாது: பிரிட்டன்"
Post a Comment