திமுக மேலவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி, தன்னை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன் மீது குற்றம் சாட்டுவதற்கான எந்த முகாந்திரமோ, ஆதாரமோ இல்லையென்பதால் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையிலிருந்து விடுவிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் இருந்து வரும் முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு அலைகற்றை உரிமம் வழங்குவதில் காட்டப்பட்ட சலுகைகளுக்கு பகரமாக சுமார் 214 கோடி ரூபாய் கலைஞர் டிவிக்கு வழங்கியதாக வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இதனால் கனிமொழி சென்ற வருடம் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறையில் இருந்து சென்ற நவம்பரில் ஜாமீனில் விடுதலையானார்.
ஆனால் தான் கலைஞர் டிவியில் பங்குதாரர் என்றும், அதனை மேலாண்மை செய்வதில் எந்த பங்கும் ஆற்றவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்வான் டெலிகாம் மூலம் வந்த பணம், கலைஞர் டிவிக்கு தரப்பட்ட கடன் என்றும், அதனை பின்பு வட்டியுடன் செலுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதனை மறுத்த சிபிஐ, பணம் சிபிஐ விசாரணைக்கு பின்பு தான் செலுத்தப்பட்டது என கூறியிருந்தது.





0 comments: on "ஸ்பெக்ட்ரம் ஊழல் - வழக்கிலிருந்து விடுவிக்க கோரி கனிமொழி வழக்கு"
Post a Comment