தலைப்புச் செய்தி

Saturday, March 24, 2012

மொபைல் போன்களில் பேச ஒரு இலட்சம் செலவழிக்கும் குவைத்தியர்கள்


சால்மியா : குவைத்தில் வசிக்கும் குவைத்தியர்கள் தங்களின் மொபைல் போன்களில் பேச மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர் என்பதும் குவைத்தில் வசிக்கும் பிற நாட்டவர்கள் சுமார் 5,000 ரூபாய்க்கும் மேல் செலவு செய்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குவைத்தில் செல் போன்களுக்கான சந்தை 12000 கோடிகளுக்கு மேல் மதிப்பு உள்ளது என்று சொல்லும் வணிக வட்டாரங்கள் செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவிகிதம் மொபைல் போனில் பேசுவதற்கும் 21 சதவிகிதம் இண்டர்நெட் சேவைகளுக்கும் 4 சதவிகிதம் தொகை மெஸேஜ் அனுப்புவதற்கும் பயன்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக மொபைல் போன்களில் பேச ஒரு வருடத்திற்கு 1,20,000க்கு மேல் குவைத்தியர்களும் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் 50,000க்கும் மேல் செலவழிக்கின்றனர். மிக குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட சராசரியாக வருடத்திற்கு 25,000 ரூபாய் செலவழிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மொபைல் போன்களில் பேச ஒரு இலட்சம் செலவழிக்கும் குவைத்தியர்கள்"

Post a Comment