தலைப்புச் செய்தி

Tuesday, March 20, 2012

சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்கிறது: பிரணாப் முகர்ஜி


நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்பு, சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நாட்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்பு அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி சமையல் எரிவாயு மற்றும் டீசல் விலையை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பிரணாப் தெரிவித்துள்ளார்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உள்நாட்டில் எரிவாயு விலைகளை உயர்த்தாமல் பணவீக்கத்தை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பிரணாப் இவ்விதம் பதிலளித்தார்.


ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ. 5ம், சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 439.50ம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று பிரணாப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்கிறது: பிரணாப் முகர்ஜி"

Post a Comment