மெக்சிகோ தலைநகரலிருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் டெல்லோபான் நகரின் வீதியில் 10 பேரின் துண்டிக்கப்பட்ட தலைகள் கிடந்தது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லோபான் நகரில் உள்ள ஒரு இறைச்சி வெட்டும் கூடத்திற்கு அருகில் 10 நபர்களின் தலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இவர்களில் 7 ஆண்கள், 3 பெண்கள் படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சுமார் 20 முதல் 35 வயது இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் தலைகள் கிடந்த இடத்திற்கு அக்கம் பக்கத்தில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
போதைப்பொருள் கும்பலின் வன்முறையில், இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று
போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
0 comments: on "வீதியில் கிடந்த 10 மனித தலைகள்: மெக்சிகோவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்"
Post a Comment