|
கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாட்டின் மதுரையில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ரதயாத்திரை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொள்ளும் பாதையில் உள்ள ஒரு பாலத்திற்கு கீழ் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த வழக்கின் மீதான விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அப்துல் ரகுமான், இஸ்மத், மற்றும் ஹக்கீம் ஆகிய 3 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைதான அப்துல் ரகுமான், இஸ்மத், சேலம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஹக்கீம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி பொலிஸார், பலத்த பாதுகாப்புடன் திருமங்கலம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு ராதாகிருஷ்ணன் வருகிற 30ம் திகதி வரை காவலை நீடித்து உத்தர விட்டார். அதனை தொடர்ந்து பொலிஸார் ஹக்கீமை மதுரை சிறையில் மீண்டும் அடைத்தனர். |





0 comments: on "அப்துல் ரகுமான், இஸ்மத் மற்றும் ஹக்கீம் காவல் நீட்டிப்பு"
Post a Comment