உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி 224 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. முலாயம்சிங் யாதவின் மகனும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று உத்தரபிரதேசத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
38 வயதான அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் முதலாவது இளம் வயது முதல்-மந்திரி ஆவார். காலை 11 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் அகிலேஷுக்கு, கவர்னர் பி.எல்.ஜோஷி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.
அகிலேஷின் அமைச்சரவையில் இளமையும், அனுபவமும் கலந்து இருக்கும் எனத் தெரிகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள். தொழில்அதிபர் அனில் அம்பானி, அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள், முதல்- மந்திரிகள், அகிலேஷின் நண்பர்கள், குடும்பத்தினர் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
0 comments: on "உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இன்று பதவியேற்பு"
Post a Comment