தலைப்புச் செய்தி

Wednesday, March 21, 2012

அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியல்: அமெரிக்க இராணுவம் முதலிடம்


உலகில் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்தின் பட்டியலில் அமெரிக்க இராணுவம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு மொத்தம் 32 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சீன இராணுவம். இதில் இருப்பவர்களோ 23 லட்சம் பேர்.
அமெரிக்க தன் படையில் வேலை செய்யும் சிவிலியன்களையும், மிகவும் அவசரமாகத் தேவை ஏற்படும் போது மட்டுமே படைக்கு அழைக்கப்படும் ரிசர்வ் துருப்புக்களையும் தனது மொத்த படை எண்ணிக்கையில் சேர்த்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை படைவீர்ர்களின் எண்ணிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் மொத்தம் 21 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். மெக் டோனால்ட்டில் 19 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். ஆனால் இந்த நிறுவனங்களின் பல கிளைகள் தனிப்பட்ட முகவர்களால் நடத்தப்படுகின்றன.
ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவையில் 17 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில் 16 லட்சம் பேரும், மற்றொரு அரச நிறுவனமான மின்தொகுப்பு நிறுவனத்தில் 15 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.
இந்தப் பட்டியலில் 14 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வேவுக்கு எட்டாவது இடமும், 13 லட்சம் பேர் கொண்ட இந்திய இராணுவத்துக்கு 9 ஆவது இடமும் கிடைத்துள்ளன. ஆப்பிள் ஐ போன், ஐ பேட் போன்றவைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 12 லட்சம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியல்: அமெரிக்க இராணுவம் முதலிடம்"

Post a Comment