தலைப்புச் செய்தி

Saturday, January 28, 2012

ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாரதீய ஜனதா கட்சி ராமர்கோயில் கட்டும் கோஷத்தை மீண்டும் துவக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் உமா பாரதி, சூர்ய பிரதாப் ஷாஹி, கல்ராஜ் மிஸ்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, சுதீந்திர குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சனையாகும் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம். போலி மதச்சார்பின்மை, வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் அகற்றப்படும் என தேர்தல் அறிக்கை கூறுகிறது.
மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாங்கள் எதிரானவர்கள் என பா.ஜ.கவின் சட்டப்பேரவை தலைவர் ஓம்ப்ரகாஷ்சிங் கூறினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கான 4.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்துச்செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
உயர்ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர்களின் நலத்திற்காக ‘சாமான்ய நிர்தன்வர்க் கல்யாண் ஆயோக்’ என்ற திட்டம் அமுல்படுத்தப்படும். 50 சதவீதம் அளவிலான இடஒதுக்கீடு கிடைக்காத சமூகத்தினருக்கு தனியாக கமிஷன் உருவாக்கப்படும். தேவைப்பட்டால் அவர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கப்படும். இவ்வாறு பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை"

Post a Comment