|
மணிப்பூர் மாநிலத்தில் சட்ட பேரவைகளுக்கான வாக்குபதிவு தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்தில் சட்ட பேரவைகளுக்காக உள்ள 60 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் பதிவு செய்து வருகின்றனர். மொத்தம் 279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு(இந்திய நேரம்) தொடங்கிய வாக்குபதிவு மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 2357 வாக்குசாவடிகளில் சுமார் 875 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கருதப்படுவதால் அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. |





0 comments: on "மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடக்கம்"
Post a Comment