தலைப்புச் செய்தி

Sunday, January 22, 2012

உலகப் புகழ் பெற்ற கோடக் நிறுவனம் திவால்


உலகப் புகழ் பெற்ற கோடக்(Kotak) புகைப்படக் கருவி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.
அமெரிக்காவின் கோடக் நிறுவனம் புகைப்படக் கருவி(Camera) மற்றும் படச் சுருள்(Film Role) ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது.
நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாதது போன்ற காரணங்களால், கடந்த 2003ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது.
ஆதலால் இதுவரை தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடிய இந்நிறுவனம் 47 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது.
இந்நிலையில் இந்நிறுவனம் அமெரிக்க அரசிடம் திவால் நோட்டீஸ்(சாப்டர் 11) சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தனிநபர்களிடம் வாங்கிய கடனை இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும்.
இந்த திவால் நோட்டீஸ் அமெரிக்காவில் இயங்கும் வர்த்தகத்திற்கு மட்டுமே என கோடக் ஆசியா பிரிவின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பி.என்.ரகுவீர் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலகப் புகழ் பெற்ற கோடக் நிறுவனம் திவால்"

Post a Comment