டெஹ்ராடூனில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி, மனீஷ் சிசோடியா ஆகிய மூவர்மீதும் வணிகர் ஒருவர் ஷூவீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்திய கடைக்காரர் பெயர் கிஷன் லால் என்று தெரியவந்துள்ளது. தாக்கியதற்கான காரணம் குறித்து அவரை விசாரணை செய்தபோது, "முன்பு சரத்பவாரின் கன்னத்தில் ஒருவர் அறைவிட்டபோது, அதுபற்றி கருத்துரைத்த அன்னா ஹஸாரே 'ஒரு அறை தானா?' என்று வினவியதால், அதற்குப் பழிவாங்க அன்னா குழுவினர் மீது ஷூ வீசியதாக" கிஷன்லால் தெரிவித்துள்ளார்.





0 comments: on "அன்னா ஹஸாரே குழுவினர் மீது செருப்பு வீச்சு!"
Post a Comment