தலைப்புச் செய்தி

Saturday, January 28, 2012

போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்


போபால்:மத்தியபிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் போஜ்சாலா தொடர்பான பிரச்சனையை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மீண்டும் கிளப்புகின்றன. இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் நோக்கத்துடன் தடை உத்தரவை மீறி பல்கி யாத்ரா நடத்துவதற்கு தயாராகி வருகிறது ஒரு ஹிந்துத்துவா அமைப்பு. இன்று நடைபெறும் பசந்த் பஞ்சமியையொட்டி இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
அகழ்வாராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போஜ்சாலாவில் அமைந்துள்ள கமால் மவ்லா மஸ்ஜிதிற்கு எதிராக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இம்மஸ்ஜித் சரஸ்வதி கோயில் என்ற பொய் பிரச்சாரத்தை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.
லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் சரஸ்வதி சிலையை இம்மஸ்ஜிதில் ஸ்தாபிக்க வேண்டும் என ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஹிந்துக்களுக்கு எல்லா செவ்வாய்க்கிழமையும், முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும் இங்கு பிரார்த்தனை புரிய அகழ்வாராய்ச்சித் துறை அனுமதி அளித்துள்ளது.
பசந்த் பஞ்சமி தினத்தில் சூரியன் உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை வழிபாடு நடத்தவும் ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அகழ்வாராய்ச்சித்துறை.
மா வாகதேவி சரஸ்வதி ஜன்மோல்சவ் சமிதி தலைவர் நவல்கிஷோர் சர்மா இந்த பல்கி யாத்ராவை நடத்துகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சரஸ்வதி சிலையை திரும்ப அளிக்கவேண்டும் என கோரி இவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார். கடந்த ஆண்டு பஞ்சமி திருவிழாவின் போது போலீஸ் சரஸ்வதி சிலையை கைப்பற்றியது.
நவல் கிஷோரின் யாத்திரைய பாதுகாப்பு காரணங்களால் தடைச் செய்வதாக தர் மாவட்ட கலெக்டர் பி.எம்.ஷர்மா அறிவித்துள்ளார். போஜ் உற்ஸவ் சமிதிக்கு மட்டுமே திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி உள்ளது என கலெக்டர் கூறியுள்ளார். தடையை மீறி யாத்திரை நடத்த முயன்றால் அதனை தடுப்பதற்கு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். உ.பி உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வேளையில் ஹிந்துத்துவாவாதிகள் இப்பிரச்சனையை மீண்டும் கிளப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்"

Post a Comment