தலைப்புச் செய்தி

Saturday, January 28, 2012

பகவத் கீதைக்கு தடை விதித்தே தீருவோம்: ஆர்தோடாக்ஸ் அமைப்பு


ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்யாமல் ஓயப்போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்தோடாக்ஸ் தேவாலய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பகவத் கீதையில் வன்முறை வாசகங்கள் உள்ளது என்று கூறி ரஷ்யாவில் உள்ள கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் என்ற பழமை வாத கிறிஸ்தவ குழு ஒன்று, அதன் மீது தடை கோரி சைபீரிய நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
பகவத் கீதை தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், ரஷ்யாவில் வேற்றுமைகளை விதைப்பதாகவும் கூறி அந்த அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தது.


இந்த தகவல் வெளியானதும் நாடாளுமன்றத்தில் அமளிகள் ஏற்பட்டதுடன் நாடு முழுவதும் ஆங்காங்கே இந்து அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியதை மறக்க முடியாது.


இந்நிலையில் ரஷ்யாவின் டோம்ஸ்க் நகரில் பகவத் கீதைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும் அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய புதன் கிழமை வரை அனுமதியும் அளித்திருந்தது.


டோம்ஸ்க் நீதிமன்றத்தில் நேற்று வரை மேல் முறையீடு செய்யப்படவில்லை. டோம்ஸ்க் நீதிமன்றத்தை விட மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து பகவத்க் கீதைக்கு தடை வாங்கியே தீருவோம் என்று கிறிஸ்டியன் தேவாலய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பகவத் கீதைக்கு தடை விதித்தே தீருவோம்: ஆர்தோடாக்ஸ் அமைப்பு"

Post a Comment