ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தாரில் இணைப்பு அலுவலகம் ஒன்றை அமைப்பது பற்றிய தலிபான்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் கடந்த 10 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போது தான் இது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இருதரப்பிலான பேச்சுவார்த்தை தொடர கத்தாரில் இணைப்பு அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கையை ஆப்கான் அரசு ஏற்றுள்ளது.
சவுதி அரேபியா அல்லது துருக்கியில் அந்த அலுவலகத்தை அமைக்கலாம் என்ற அரசின் பரிந்துரையை தலிபான்கள் நிராகரித்து விட்டனர்.
மேலும் குவான்டனமோ சிறையில் உள்ள தலிபான்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், தலிபான்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அவர்களை ஆப்கான் அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.





0 comments: on "கத்தாரில் தலிபான்களின் இணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவ அரசு சம்மதம்"
Post a Comment