தலைப்புச் செய்தி

Thursday, January 5, 2012

மங்களூர் விமான விபத்து: இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


இந்தியாவில் நடந்த மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010 மே 22 ம் திகதி துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடு தளத்தை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 163 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 158 பேர் பலியாகி விட்டனர்.


இந்த விமான விபத்தில் உயிரிழந்த 158 பேரின் குடும்பங்களுக்கு குறைபட்ச இழப்பீட்டு தொகையாக ரூ.75 லட்சம் வழங்க வேண்டும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மங்களூர் விமான விபத்து: இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு"

Post a Comment