கூடங்குளம் அணு உலைக்கு எதிரானவர்களுடன் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு அதிகாரிகள் கணக்குக் கேட்டு விசாரணை நடத்தினர். புதுடெல்லியிலிருந்து ரகசியமாக வந்துள்ள சிறப்பு படையினர், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மத்திய உள்துறை அதிகாரிகள் கூறியதாவது, மத்திய அரசில் பணியாற்றும் துணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள ஜோகிந்தர் பிரசாத் மற்றும் கணக்குப்பிரிவு அதிகாரி சுக்கிந்தர் சிங் ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர் தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி மறை மாவட்ட ஆணையர் இவான் அம்ப்ரோஸ் அலுவலக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்துள்ளது. |
வெளிநாட்டிலிருந்து வந்த பணம் அதற்கான முறையான செலவுக்கணக்கு மற்றும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று தெரிவித்துள்ளனர். |
0 comments: on "கூடங்குளம் அணு உலைக்கு எதிரானவர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மீது சோதனை"
Post a Comment