தலைப்புச் செய்தி

Thursday, January 19, 2012

ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை

மும்பை:மலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளை குறித்து விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)க்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில்ஜோஷியின் கொலை வழக்கு விசாரணை முக்கியத்துவமாக மாறும்.
சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் ஆதாரங்கள் இதர வழக்குகளுடன் பிணைந்து கிடப்பதால் இவ்வழக்கின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜோஷி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தால் மட்டுமே ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள் இடையேயான தொடர்பை வெளிக்கொணர முடியும் என என்.ஐ.ஏ கருதுகிறது.
ஆனால், மலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர்களை பல தடவை விசாரணை நடத்தியதை தவிர இவ்வழக்கில் வேறு எந்த முன்னேற்றத்தையும் பெற என்.ஐ.ஏவால் முடியவில்லை.
ஜோஷியின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் உள்பட பல
ஆதாரங்களும் அழிக்கப்பட்டதுதான் என்.ஐ.ஏ இவ்வழக்கில் திணறுவதற்கு காரணம்.
மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் 2007 நவம்பர் 29-ஆம் தேதி 29-வயதான ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ஜோஷியின் நெருங்கிய நண்பர்கள்தாம் இக்கொலைக்கு காரணம் என முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்த மாநில பா.ஜ.க அரசு முயலவில்லை. வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கும் முன்பே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் வேறு குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்ய என்.ஐ.ஏ திட்டமிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை அழைக்கும் குறிப்புப் பெயரான குருஜி என்ற வார்த்தையால் அழைக்கப்பட்ட ஜோஷி அந்த இயக்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை என்.ஐ.ஏ ஆராய்ந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்
தேசிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜோஷிக்கு அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு ஏதோ தீவிரமான காரணம் இருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஜோஷியை ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியிருந்தாலும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன்
தொடர்பில் இருந்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஜோஷி கொலைச் செய்யப்பட்டவுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால், குண்டுவெடிப்புகளுடன் ஜோஷியின் தொடர்பு குறித்து செய்தி வெளியானவுடன் அவருடைய வீட்டுடன் இருந்த தொடர்பை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் துண்டித்துள்ளனர்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரியாக ஜோஷி செயல்பட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலம்தான் ஜோஷி வழக்கில் முக்கிய ஆதாரம். இவருக்கு கிடைத்த அரசியல் மற்றும் பொருளாதார உதவிக் குறித்து போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஜோஷியின் பின்னணியில் செயல்பட்ட பெரும் புள்ளிகள் தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை"

Post a Comment