மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
சமூக ஆர்வலர்கள் வரிசையில் இளைஞர் குழு ஒன்று இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் ஒரு சிறிய குழுவாக கன்னியாகுமாரி இருந்து தலைநகர் புதுடெல்லி வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவின் தலைவர் அப்துல் முஜீப்கான் கூறியதாவது, இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவதே எங்களது நோக்கம். எங்களது நோக்கம் தனிப்பட்ட அளவில் நேர்மையாக இருந்தால் ஊழல் இல்லாத நாடாக இந்தியா மாறி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த விழிப்புணர்வு போராட்டம் கன்னியாகுமாரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து புதுடெல்லியில் உள்ள ராஜ்காட்டில் முடிவடைகின்றது.
தற்போது இந்த குழு விஜயவாடாவை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
comments:
on "ஊழல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற புறப்பட்டுள்ள இளைஞர் குழுவினர்"
0 comments: on "ஊழல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற புறப்பட்டுள்ள இளைஞர் குழுவினர்"
Post a Comment