ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதற்கிடையே ராம்தேவ் ஆதரவாளர் ஒருவர், சோனியாகாந்தி படத்தின் மீது கறுப்பு மையை தெளித்தார். இதனால் அவரை அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அடித்து உதைத்ததால் கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், ராம்தேவ் ஆதரவாளரை மீட்டனர். யோகா குரு ராம்தேவை மத்திய அரசு தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ராம்தேவ் ஆதரவாளர்களின் இந்த போராட்டத்தை அடுத்து காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் தொண்டர்கள், சோனியா படத்தின் மீது தெளிக்கப்பட்ட மையை தண்ணீர் உற்றி சுத்தப்படுத்தினர்.
0 comments: on "காங்கிரசுக்கு எதிராக போராட்டம்"
Post a Comment