தலைப்புச் செய்தி

Tuesday, January 17, 2012

ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
தலைநகர் ஜம்முவில் நேற்று முன்தினம் இரவு மட்டும் 4 செ.மீ பனிப்பொழிவு பதிவானது. வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரில் 15 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட்டது.

சோனாமார்க்கில் அதிகபட்சமாக 20 செ.மீ பனிப்பொழிவு பதிவாகி இருந்தது. தொடர் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

சாலையின் பல பகுதிகள் பனியால் மூடிகிடப்பதால் பனியை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புகழ் பெற்ற தால் ஏரி பனிப்பொழிவினால் உறைந்துள்ளது.
மேலும் ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் பனிப்பொழிவால் மூடப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முசாபராபாத்துக்கு வாரந்தோறும் இயக்கப்படும் பேருந்து நேற்று இயக்கப்படவில்லை. பனிபொழிவு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பேருந்து இயக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு"

Post a Comment