கடந்த ஆண்டில் இந்திய-சீனா உறவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேச குடிமக்களுக்கு விசா அளித்து இந்திய ராணுவத் தளபதிக்கு விசா தர மறுத்தது, திபெத்திய தலைவர் தலாய் லாமாவைக் காரணம் காட்டி எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சு வார்த்தையை தள்ளிப் போட்டது என சில பிரச்சினைகள் எழுந்தன.
இதன் விளைவாக ராணுவ மட்டத்திலான அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் இந்தியா, தனது ராணுவ பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 30ல் இருந்து 15 ஆக குறைத்தது. இதற்கிடையே இம்மாத இறுதியில் எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
இந்நிலையில் சீனாவின் ஷின்ஹூவா நாளிதழுக்கு அந்நாட்டின் வெளியுறவு துறை உதவி அமைச்சர் லியு ஜென்மின், இரு நாட்டுத் தலைவர்கள் மத்தியில் முக்கிய பிரச்சினைகளில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவுடன் உயர் மட்ட அளவிலான பேச்சு வார்த்தையை தொடரவும் அரசியல் தரப்பிலான நம்பிக்கையை அதிகரிக்கவும் இரு தரப்பு உறவில் கவலையை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினைகளை முறையாகக் கையாளவும் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். |
0 comments: on "இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க சீனா ஆர்வம்"
Post a Comment