தலைப்புச் செய்தி

Tuesday, January 10, 2012

ஜம்மு காஷ்மீர் லடாக் ஏரிப் பகுதியில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலை நோக்கி


இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலை நோக்கி அமையவுள்ளது.
பூமியில் நிலவும் பருவநிலைமாற்றம், சுற்றச்சூழல் ஆகியவற்றை ஆராய, மிகப் பெரிய சோலார் தொலை நோக்கியை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசின் அறிவியல் ‌தொழில் நுட்ப மையம் முடிவு செய்திருந்தது.
இதற்காக அம்மாநிலத்தின் ‌லடாக் மாவட்டத்தின் அடர்ந்த பனிப்பிரதேசமான பாங்காங்ஷோ ஏரிப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14720 அடி உயரத்தில் அமைக்க இடம் தெரிவு செய்யப்பட்டது.


இதற்கு முன்பு லடாக்கில் சோலார் தொலை நோக்கியை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த தொலை நோக்கியை அமைப்பது குறித்து மாநிலம் அரசும், மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை செயலர் மாதவ் லால், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கு காஷ்மீர் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.


சோலார் தொலைநோக்கி கட்டுமான பணிகள் தொடங்க தேவையான உதவிகளை செய்ய அரசு தயராக உள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சோலார் தொலைநோக்கியினால் 134 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கினை 5 கி.மீ ‌அருகில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜம்மு காஷ்மீர் லடாக் ஏரிப் பகுதியில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலை நோக்கி"

Post a Comment