ஈரானில் அமெரிக்காவுக்கு உளவு வேலை செய்ததாக கைது செய்யப்பட்டவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஈரானில் அமீர் மிர்சாய் ஹக்மதி என்ற 28 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவுக்கு உளவு வேலை பார்த்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இவர்மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அவர் அமெரிக்காவுக்கு உளவு வேலை பார்த்ததற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு உளவுவேலை பார்த்த ஹக்மதி ஈரான் குடியுரிமை உள்ளவர் என்றாலும் அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: on "ஈரானில் அமெரிக்க உளவாளிக்கு மரணதண்டனை!"
Post a Comment