| இந்தியாவின் மேற்கு வங்கத்தில் அரசுப் பணியில் சேர அதிகபட்ச வயது வரம்பு 37லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
| மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் தலைநகர் கொல்கத்தாவில் நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, முந்தைய இடதுசாரி முன்னணி அரசு, மாநிலத்தில் அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பை 32 லிருந்து 37 ஆக உயர்த்தியிருந்தது. இதற்கான கால வரம்பு முடிவடைவதை அடுத்து நாங்கள் வயது உச்சவரம்பை 37லிருந்து 40 ஆக உயர்த்தி உள்ளோம். இது அரசு வேலைக்கான பொதுப்பிரிவில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்குப் பொருந்தும். இது தவிர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 42 லிருந்து 45 ஆகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பு 40லிருந்து 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பலருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே இரண்டு லட்சத்து 75 ஆயிரம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் நான்கு அல்லது ஐந்து லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். |





0 comments: on "மேற்கு வங்கத்தில் அரசு பணிக்கான வயது வரம்பு உயர்வு: முதல்வர் மம்தா பானர்ஜி"
Post a Comment