தலைப்புச் செய்தி

Wednesday, January 4, 2012

கத்தாரில் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம்-தலிபான்

கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டிலோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
சர்வதேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த நகர்வு உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சமாதான நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் அலுவலகம் அமைக்கும் யோசனையை தாம் வரவேற்போம் என்று கடந்த வாரம் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சர்ச்சை நிலவியதாக முன்னர் நம்பப்பட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கத்தாரில் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம்-தலிபான்"

Post a Comment