தலைப்புச் செய்தி

Monday, January 9, 2012

இந்தியாவின் பொருளாதாரம் உயரும்: பிரதமர் நம்பிக்கை


இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 10வது பிரவசி பாரதிய திவாஸ்(Pravasi Bhartiya Divas) விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவில் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


பண வீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரவசி பாரதிய திவாஸ் விழாவில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1900 பேர் கலந்து கொண்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்தியாவின் பொருளாதாரம் உயரும்: பிரதமர் நம்பிக்கை"

Post a Comment