மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கல்மாடிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதால் 2ஜி அலைக்கற்றை வழக்கில் இதுவரை பிணை பற்றி யோசிக்காத ராஜா, விரைவில் மனுத்தாக்கல் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஒரு வருடமாக முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் பிணை கோரி மனுத்தாக்கல் ஏதும் செய்யவில்லை. இந்நிலையில் ராஜாவின் வழக்கறிஞர்கள் கூறுகையில், காமன்வெல்த் போட்டி ஊழலில் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை மற்றும் அதைத் தொடர்ந்து தாக்கல் செய்த இரண்டு துணை குற்றப் பத்திரிகையிலும் கல்மாடியின் பெயர் இடம் பெற்றது.
ஆனால் 2ஜி வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டாவது துணை குற்றப் பத்திரிகையில் ராஜாவின் பெயர் இல்லை. மேலும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் ராஜாவுக்கும், கல்மாடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
எனவே கல்மாடிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த பிணை உத்தரவை முழுமையாக படித்த பின் மனுத்தாக்கல் செய்வது குறித்து ராஜா முடிவு செய்வார் என்றனர்.
0
comments:
on "விரைவில் பிணை கோரி ராஜா மனுத்தாக்கல்"
0 comments: on "விரைவில் பிணை கோரி ராஜா மனுத்தாக்கல்"
Post a Comment