புத்தாண்டையொட்டி பஞ்சாப் பொற்கோவிலுக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் கறுப்புக்கொடி காட்டியதால் கோயில் அருகே பெரும் பரபரப்பு நிலவியது.
புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க பிரதமர் மற்றும் அவரது மனைவி குர்சரண்கவுர் பொற்கோவிலுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு வரவேற்பும்,மரியாதையும் வழங்கப்பட்டது.பிரார்த்தனை முடிந்து வெளியே வந்த போது கோயில் அருகே காத்திருந்த ஹசாரேயின் ஆதரவாளர்கள் 40 பேர் கறுப்பு கொடியுடன் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் லோக்பால் மசோதா நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாண்டு முதல் நாளில் பிரதருக்கு கறுப்பு கொடி காட்டியதால் பிரதமர் கவலையடைந்தார்.
வழக்கமாக கறுப்புக்கொடி காட்டப்போவதை உளவுத்துறை போலீசார் முன்கூட்டியே அறிந்து போராட்டக்காரர்களை கைது செய்து விடுவர்.ஆனால் இன்றைய சம்பவத்தில் போலீசாருக்குத்தெரியாத அளவிற்கு ஹசாரே ஆதரவாளர்கள் பக்தர்களோடு பக்தர்களாக கலந்திருந்தத்ஹக்ச் சொல்லப்படுகிறது. பிரதமர் கோயிலிலிருந்து வெளியே வருகிறார் என தெரிந்ததும் 40 பேரும் ஒரே இடத்தில் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு ஓரிடத்தில்கூடி கறுப்பு கொடியுடன் ஆவேச குரல் எழுப்பினர். இதனால் போலீசார் திடீர் போராட்டக்காரர்களை கண்டு மிரண்டு போயினர். இருப்பினும் பிரதமருடன் வந்த பாதுகாவலர்கள் அவரை நெருங்க விடாமல் பாதுகாத்து கொண்டனர்.

0 comments: on "பிரதமருக்கு புத்தாண்டு முதல்நாளில் கருப்புக் கொடி!"
Post a Comment