தலைப்புச் செய்தி

Monday, January 2, 2012

அமெரிக்கா, நேட்டோ படையின் ஆயுதங்கள் பறிமுதல்: பாகிஸ்தான் அதிரடி!

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைக்குப் பொருட்களை எடுத்து செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பாகிஸ்தானில் வைத்துள்ள ராணுவ தளவாடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் முதலானவற்றை அமெரிக்கா அவசரம் அவசரமாக வெளியேற்றி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைக்குச் சொந்தமான நவீன ராணுவ ஆயுதங்களை, பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. இவை 250 கண்டெய்னர்களில் இருப்பதாக பாகிஸ்தானின் டெலிவிஷன் ஒன்று தெரிவித்தது. பாதுகாப்பு கருதி இந்த ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பறிமுதல் செய்து 
வைத்திருப்பதாகவும், அரசிடம் இருந்து உத்தரவு வரும் வரை எங்கள் பாதுகாப்பில் இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவை காசிம் துறைமுக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆயுதங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள், கவச டாங்கிகள், தகவல்தொடர்புகளை இடைமறித்து கேட்கும் கருவிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த நவீன ஆயுதங்கள் அமெரிக்காவில் இருந்து சரக்கு கப்பல் மூலம் சென்றவை என்றும் அவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளவை என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்க அரசில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்கா, நேட்டோ படையின் ஆயுதங்கள் பறிமுதல்: பாகிஸ்தான் அதிரடி!"

Post a Comment