புதுடெல்லி:ஊழல், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சனைகளில் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அவைக்கு 258 மணிநேரங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.மூன்று கூட்டத்தொடர்களுக்காக 73 தினங்கள் பாராளுமன்றம் கடந்த ஆண்டு கூடியது.மொத்தம் 803 மணிநேரங்கள் பாராளுமன்றத்தில் கூட்டத்திற்காக நிச்சயிக்கப்பட்டது.அமளி காரணமாக 258 மணிநேரங்கள் இழப்பு ஏற்பட்டன.
30 சதவீதத்திற்கு அதிகமான விலைமதிப்பான மணிநேரங்கள் நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டதாக இதுத்தொடர்பாக வெளியான அறிக்கை கூறுகிறது.பி.ஆர்.எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.ஒரு வருடத்திற்கு பாராளுமன்றத்தின் மக்களவை 438 மணிநேரங்களும், மாநிலங்களவை 365 மணிநேரங்களும் கூட்டத்திற்காக செலவழிக்கவேண்டும் என்பது சட்டமாகும்.





0 comments: on "கடந்த ஆண்டு பாராளுமன்றத்திற்கு 258 மணிநேரம் இழப்பு"
Post a Comment