தலைப்புச் செய்தி

Monday, January 2, 2012

2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்


இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010 ல் நடந்த வன்முறைகளை விட 2011 ல் நடந்தவை குறைவு என்று அம்மாநில காவல்துறை பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 2011ம் ஆண்டு 190 வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என்று அம்மாநில காவல் துறை பொது இயக்குனர்(DGP) குல்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.


கடந்த 2010ம் ஆண்டு 368 வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இது 2011 ம் ஆண்டில் 47 சதவீதமாக குறைந்துள்ளது. தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 323ல் இருந்து 159 ஆக குறைந்துள்ளது.


ஜம்மு மாகாணத்தில் உள்ள ரியாசி மற்றும் எல்லையோர மாவட்டங்களான சம்பா, காதுவா போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்"

Post a Comment