தலைப்புச் செய்தி

Wednesday, January 4, 2012

சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு 2 முஸ்லிம்கள் பலி

சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ளது நின்ஜியா ஹூய் நகரம். இங்குள்ள மசூதி ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்று கூறி அதை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் அங்கு குவிக்கப்பட்டு மசூதி இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை ஏற்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கும்பலை விரட்டினர். இதில் 2 பேர் பலியாயினர், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் திட்டவட்டமாக மறுத்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு 2 முஸ்லிம்கள் பலி"

Post a Comment