அன்னா ஹசாரே சமீபகாலமாக ராகுல் காந்தியை பற்றி இழிவாகப் பேசி வருவது குறித்து, மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா நிருபர்களிடம், கூரும்போது, "ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவர் மட்டுமே. எம்.பி.யாகவும் இருக்கிறார். அவருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது" என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, அன்னா ஹசாரே 75 வயதான பெரியவர் என்று குறிப்பிடுகிறார்கள். காங்கிரசுக்கு வயது 125 என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவரின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இருக்கிறது, அவர் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளராகவே மாறி விட்டார். என பெனி பிரசாத் வர்மா குறிப்பிட்டார்.





0 comments: on "RSS கை கூலி ஹசாரேக்கு வயது 75 ஆனால் காங்கிரசுக்கு வயது 125:பெனி பிரசாத் வர்மா!"
Post a Comment