தலைப்புச் செய்தி

Tuesday, December 13, 2011

அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம்: மனுவை தள்ளுபடிச் செய்தது உச்சநீதிமன்றம்


புதுடெல்லி:ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஷேக் அஹ்மத் அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. மேலும் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல் சட்டத்தில் கூறப்படுவதற்கு முரணாக அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர் அந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரர் கமால் நயன் பிரபாகரின் கோரிக்கையாகும்.
இறைவனுக்கு குறிப்பிட்ட உருவம் இல்லை என்பது உலகம் முழுவதும் பரப்பப்பட்ட உண்மையாகும். ஏன் இறைவனுக்கு தனிப்பெயரும், உருவமும் அளித்து சிறப்பிக்க முயல்கின்றீர்கள்? என நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. மனுதாரருக்கு முதலில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த பிறகு அவருடைய வழக்கறிஞர் அபராத தொகையை குறைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்ததை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. முன்னர் இதே கோரிக்கையை முன்வைத்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடிச் செய்யப்பட்டது.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம்: மனுவை தள்ளுபடிச் செய்தது உச்சநீதிமன்றம்"

Post a Comment