தலைப்புச் செய்தி

Tuesday, December 20, 2011

முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்


கொச்சி:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தடையாக இருப்பது முஸ்லிம் வாக்கு வங்கியாகும் .எனவே அதனை முற்றிலும் அழித்தொழிப்பதே விசுவ ஹிந்து பரிஷத்தின் நோக்கம் என அவ்வமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ப்ரஸ் க்ளப்பில் நடந்த ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் தொகாடியா. அப்பொழுது தொகாடியா கூறியதாவது: ‘இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முஸ்லிம் வாக்கு வங்கியை குறித்தும், கிறிஸ்தவ வாக்கு வங்கியை குறித்தும் பயமாகும். ஆதலால் இந்த வாக்குவங்கியை அழிப்பது அத்தியாவசியமானதாகும். கேரளாவில் பசுவதையை தடைச் செய்யக்கோரும் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு பஜ்ரங்தள் தலைமை வகிக்கும்.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் எனது பங்கும் உண்டு. இம்மாற்றம் நாடு முழுவதும் தேவையாகும்’ என தொகாடியா கூறினார்.


News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்"

Post a Comment