ஜெருசலம்:ஹமாஸுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 550 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் செய்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஃபலஸ்தீன் போராளிகளால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஷாலிதிற்கு பதிலாக 1027 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்வதாக இஸ்ரேல் ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்தது.
கடந்த அக்டோபர் மாதம் ஷாலிதை விடுதலைச்செய்த வேளையில் 447 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுதலைச் செய்திருந்தது. இதன் இரண்டாவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.





0 comments: on "550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்"
Post a Comment