அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியுள்ளார்.
ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பைசாய் என்ற இடத்தில் நேட்டோ படையின் விமானங்கள் கடந்த 26ம் திகதி குண்டுகளை வீசித் தாக்கின. இதில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர்.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற பாகிஸ்தான் அரசு 15 நாள் கெடு விதித்தது. கெடு முடிந்ததால் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி தளத்தில் இருந்து அமெரிக்க படை நேற்று(11.12.2011) வெளியேறியது. இது அமெரிக்கா- பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில், அமெரிக்கா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நம்பிக்கை குறைந்திருக்கிறது. கணிசமான இடைவெளி விழுந்திருக்கிறது என்றார்.
அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஷாம்சி தளம் பாகிஸ்தானின் முழு கட்டுப்பாட்டில் வந்திருப்பதை கிலானி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.





0 comments: on "அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது: கிலானி"
Post a Comment