ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் யாருக்கும் தெரியாமல் கீர்கென் என்ற பணக்காரரின் மனைவியான எகோன் கீர்கெனின்சிடம் அரை மில்லியன் யூரோ கடன் வாங்கியுள்ளார்.
இந்த ரகசியம் தற்போது வெளியாகி விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி குரல் எழுப்பியுள்ளது.
ஜேர்மனியின் வடக்குப் பகுதியில் லோயர் சேக்ஸனி என்ற மாநிலத்தின் தலைவராக இருந்த போது இந்த ஊழல் நடைபெற்றது. இதனை இப்போது கிறிஸ்டியன் உல்ப் ஒத்துக் கொண்டுள்ளார்.
மைய-இடது சாரிப் பிரிவைச் சேர்ந்த சமூகக் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான தாமஸ் ஓப்பர்மன் ஜேர்மனியின் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், உல்ப் கீர்கென்சின் மனைவி எடித் என்பவரிடம் பெற்ற வீட்டுக் கடன் பற்றி முழுமையாக விளக்கினால் மட்டுமே அவருடைய நம்பகத்தன்மை காப்பாற்றப்படும் என்றார்.
இக்கட்சியின் பொதுச் செயலர் ஆண்டிரியா நாஹ்லெஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
இதுகுறித்து உல்ப் கூறுகையில், பதவி விலக கூடிய அளவுக்கு எந்த தவறையும் நான் செய்யவில்லை என்றார்.
மேலும் கூறுகையில், தனக்கும் எகோன் கீர்கென்சுக்கும் எவ்வித வர்த்தகத் தொடர்பும் கிடையாது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஆனவுடன் வங்கிக் கடன் பெற்று எடித் கீர்கென்ஸிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.





0 comments: on "கடன் தொல்லையால் அவதிப்படும் ஜேர்மன் ஜனாதிபதி"
Post a Comment