பாகிஸ்தான் தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் எந்தவித காரணமும் கூறாமல் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று கராச்சியில் நடந்தது.
அந்த கூட்டம் அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பராப்பானது. இதில் கலந்து கொண்ட அந்நாட்டு தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பிரதமர் கிலானியிடம் அவான் கூறியதாவது, அமைச்சரவை உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் அனுமதியுடன் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி அழுதுவிட்டார். தனது இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று அவர் தெரிவிக்கவில்லை.
இதன் பின்னர் ராஜினாமா குறித்து அமைச்சரும், பிரதமரும் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் நிராகரித்தார்.
கடந்த 2008ம் ஆண்டு ஸர்தாரி அரசு பதவிக்கு வந்த பிறகு பொறுப்பேற்ற 3வது தகவல் அமைச்சர் அவான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பு ஷெர்ரி ரஹ்மான்(தற்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர்) மற்றும் குவாமர் ஜமான் கைரா ஆகியோர் தகவல் அமைச்சர்களாக இருந்தனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பிரச்சனை ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு ஆதரவு அளித்து வந்த அவான் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றித்தின் போது அமைச்சரானார்.





0 comments: on "பாகிஸ்தானில் அமைச்சர் திடீர் ராஜினாமா: அழுதபடியே தனது கடிதத்தை கொடுத்தார்"
Post a Comment