ஏழு வருடங்கள் கடந்தும் சுனாமித் தாக்குதல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை. சுனாமி தாக்குதலுக்கு தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் 8 ஆயிரத்து 83 பேர் உயிரிழந்தனர். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் உரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 684 பேரை சுனாமி பலி கொண்டது. இந்த துயர சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நாகை, வேளாங்கன்னி, தரங்கம்பாடி, உள்ளிட்ட தமிழக கடற்கரையோர பகுதிகிளல் நினைவு பேரணி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இந்தியா மட்டுமின்றி சுனாமி தாக்கிய மற்ற நாடுகளும் இன்று ஏழாம் வருட துக்க தினத்தை அனுசரித்து வருகின்றன.




0 comments: on "இன்று ஏழாவது ஆண்டு சுனாமி நினைவு தினம்"
Post a Comment